தலங்கம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைய சகோதரன் தாக்கப்பட்டு தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வசித்து வந்த வீட்டினுள் எலி ஒன்று புகுந்ததாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைய சகோதரன் பத்தரமுல்லை தலங்கம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஓய்வுபெற்ற கணக்காளர் என்பதுடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

மூத்த சகோதரன் திருமணமாகாமல் வீட்டில் வசித்துள்ள நிலையில் உயிரிழந்த இளைய சகோதரனின் பிள்ளைகளும் மனைவியும் வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version