மத்தியபிரதேச மாநிலத்தில் 29 வயது இளைஞரான ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில் ‘எனக்கு மணப்பெண் வேண்டும்’ என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பெண் தேடாமல் தனது பெற்றோர் பிரார்த்தனை மட்டுமே செய்து வந்ததால், விரக்தியடைந்த தீபேந்திர ரத்தோர் திருமண வரன் பார்க்கும் குழுவில் இணைந்துள்ளார்.
அங்கும் அவருக்கு பெண் கிடைக்கத்தால் மனமுடைந்த அவர் வித்தியாசமான முறையில் ‘எனக்கு மணப்பெண் வேண்டும்’ என தன்னுடைய சொந்த ரிக்ஷயாவில் விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.
இது தொடர்பாகப் பேசிய ரத்தோர், “எந்த சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய மனைவியாக வருபவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.