கண்டி – முருத்தலாவ குருகம பிரதேசத்தில் 55 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் பேராதனை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டவரின் மகளின் கணவர் என்றும் இவர்கள் தற்போது விவாகரத்து செய்யும் நிலையில் இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டுக்கு முன்பாக சந்தேகநபர்கள் வந்த போது 26 வயதுடைய சந்தேகநபர் கிரிக்கெட் மட்டையுடன் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றன

கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமாக நடந்துகொண்டு, தந்தையைத் தாக்கியுள்ளனர் என இறந்தவரின் மகள் சம்பவம் குறித்து பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்படி நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பேராதனை பொலிஸ் பிரிவினர் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மறுநாள் காலை தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிற்கு அருகே மாரிமுத்து தர்மலிங்கம் என்பர் இறந்து கிடந்ததுள்ளமை வெளிவந்துள்ளது.

சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட உள் இரத்தக் கசிவுதான் மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version