ஆன்ந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான லகான் லக்வானு என்ற நிகழ்வு நடைபெற்றது.

ஜாம்நகரில் உள்ள அம்பானியின் பண்ணை வீட்டில், இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்வில் அம்பானி குடும்பத்தை சேர்ந்த எல்லா பெண்களும், அனாமிகா கண்ணா வடிவமைத்த லெஹங்காக்களை அவர்கள் அணிந்திருந்தனர்.

ஆன்ந்த் அம்பானிக்கு மனைவியாகும் ராதிகா, க்ரீம் மற்றும் இளம் பச்சை லெஹங்காவை அணிந்திருந்தார். இதில் பூக்கள் போன்ற வேலைபாடுகள் உள்ளது.

இதில் கதை வேலைபாடுகள் உள்ளது. இந்நிலையில் லெஹங்காவின் பாவாடைக்கு ஏற்றவாறு பிளவுஸ் அணிந்திருந்தார்.

இதற்கு ஏற்றவாறு வைர நெக்லேஸ், நெத்திச்சுட்டி, கம்மல் அணிந்திருந்தார். இந்த வேலைபாடுகள் வசந்த காலத்தில் உள்ள மலர்களை குறிப்பாதாக உள்ளது.

இஷா அம்பானி தங்க டோரி வேலைபாடுகள் உள்ள முத்துகள் பதித்த லெஹங்காவை அணிந்திருந்தார். மேலும் அவர் பிங்க் நிறத்தை மையமாக வைத்து லெஹங்காவை அணிந்திருந்தார். இதற்கு இவர் பச்சை எமரால்டு ஆல் ஆன நெக்லேஸ், ஜிமிக்கி, வலையல்களை அணிருந்தார்.

ஷோல்கா மேதா மஸ்டண்டு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் லெஹங்காவை அணிந்திருந்தார். அதில் சில்வர் நிற கனமான வேலைபாடுகள் உள்ளது. இதற்கு பிங்க் நிறத்தில் துப்பட்டா அணிந்துள்ளார். மேலும் அவர் எமரால்டு மற்றும் வைர நகைகளை அணிந்துள்ளார்.

&

நீட்டா அம்பானி லாவண்டர் நிறத்தில் துப்பாட்டவும், இளம் பச்சை மற்றும் பேஸ்டல் நிறத்தில் லெஹங்காவை அணிந்துள்ளார். இதில் ஆரி, சர்தோசி, நூல் வேலைபாடுகள் இருந்தது. அதிக கனம் உள்ள நெக்லேஸ், ஜிமிக்கி, நெத்திசுட்டி ஆகியவை உள்ளது. இதற்கு ஏற்றதுபோல் பிங்க் பளபளப்பு மேக் ஆப் செய்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version