ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறார்.

கேரக்டர் நடிகராக உள்ளே வந்து பின்னர் வில்லன் நடிகராக மாறி பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானவர் தான் ரஜினிகாந்த்.

80 காலக்கட்டங்களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக வலம் வந்த ரஜினிகாந்த், 1981-ம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே இயக்குனராக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் நடிக்க உள்ளார்.

இதனிடையே ரஜினிகாந்த் – லதா திருமணம் குறித்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனது கல்லூரி மேகசீனுக்காக ரஜினியை இன்டர்வியூ எடுக்க விரும்பிய லதா, இது குறித்து ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொல்ல, அவர் தான் தில்லு முல்லு ஷூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்திடம் அழைத்து சென்றுள்ளார்.

அதன்பிறகு ஒருநாள் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு போன் செய்த ரஜினிகாந்த், நான் லதாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட மகேந்திரன் தாராளமா பண்ணிக்கங்க. இதை ஏன் என்னிடம் சொல்றீங்க, உங்க சக நடிகை தானே (நடிகை லதா) நீங்கள் அவரிடமே சொல்லலாமே என்று கூறியுள்ளார்.

நான் அவர சொல்லல உங்க சிஸ்டர் இன்லா லதாவை சொன்னேன் என்று ரஜினிகாந்த் சொல்ல, அதன்பிறகு இரு குடும்பமும் சந்தித்து பேசி இந்த திருமணம் நடந்தது என்று ஒய்.ஜி.மகேந்திரன்  சொன்னதாக இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணனுடனாக இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version