இந்தியாவில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர் – குழந்தைகளுக்கான உறவு, சகோதர – சகோதரிகளுக்கான உறவு, கணவன் – மனைவி உறவு என உறவுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும். ஆனால் அண்ணன் – தங்கை உறவை கணவன் – மனைவி உறவாக மாற்றியுள்ளது ஒரு கிராமம்.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆண்கள் தங்கள் அத்தை மகள், மாமன் மகள், அக்கா மகள் போன்ற முறை பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய பாரம்பரியத்தில் குடும்பம் மற்றும் திருமண முறை மிகவும் முக்கியமானது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஒரே மாதிரியான உறவு முறைகள் தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
“துருவா” என்ற பழங்குடி சமூகம் ஒன்று உள்ளது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே இந்த மக்கள் சாதாரண மக்களை விட சற்று வித்தியாசமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கின்றனர்.
இங்கு ஏன் இப்படிஒரு கலாச்சாரம் பின்பற்றபடுகிறது என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. ஆனால் யாரேனும் தங்கள் சகோதர, சகோதரிகளை திருமணம் செய்ய மறுத்தால் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த பழங்குடியின சமூகத்தின் கலாச்சாரம் குறித்து கடும் எதிர்ப்புகள் இருந்தாலும் தங்கள் இனத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக அவர்கள் அத்தகைய நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.