காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று (01) காலை பாடசாலையொன்றின் மரதன் ஓட்டப் போட்டியில் ஓடிய வீரருக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக வீரருக்கு அருகே துவிச்சக்கர வண்டியில் இந்த இளைஞர் பயணித்துள்ளார்.

இந்நிலையிலேயே மீசாலை பகுதியில் அவர் மீது பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்து மோதி, பின்னர், அருகிலுள்ள தென்னை மரத்தையும் மோதியது.

அதனையடுத்து, இளைஞர் மிகவும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே பேருந்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version