அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசை கலைஞர் கலீத் முகம்மது காலித். 48 வயதான இவர் ஆல்பம் பாடல்கள் தயாரிப்பது மட்டுமின்றி ஏராளமான இசை துறை நிறுவனங்களுக்கு இசைப்பதிவும் செய்து கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சவுத் பீச் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது காரில் இருந்து இறங்கிய கலீத் தனது காலணிகள் அழுக்காகி விடும் என்பதற்காக தன்னை கச்சேரி நடைபெறும் மேடை வரை தூக்கி செல்லுமாறு பாதுகாவலர்களிடம் கூறி உள்ளார். அதன்படி 2 பாதுகாவலர்கள் அவரை தூக்கி ஒரு வண்டியின் பின்புறத்தில் ஏற்றி மேடைக்கு அழைத்து சென்றுள்ளனர். பாதுகாவலர்கள் அவரை தூக்கி சென்ற காட்சிகள் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியானது.

இந்த வீடியோ சுமார் 29 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் கலீத்தின் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது இந்த செயல் மிகவும் அபத்தமானது எனவும், முட்டாள்தனமானது எனவும் விமர்சித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version