ரனியா அபு அன்ஜா கர்ப்பம் தரிப்பதற்கு பத்து வருடங்களும் மூன்று ஐவிஎவ் சிகிச்சைகளும் தேவைப்பட்டன – ஆனால் அவர் ஐந்து நிமிடங்களில் தனது இரண்டு ஐந்துமாத இரட்டையர்களையும் இழந்துவிட்டார்.

கடந்த சனிக்கிழமை ரபாவில் உள்ள அவரது வீட்டை இஸ்ரேல் தாக்கியவேளை அவரது பிள்ளைகள் கணவர் உறவினர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

ஒன்பது பேர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர்,என உயிர்தப்பியவர்களும் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

இரவு பத்துமணிக்கு தனது மகனிற்கு பால் ஊட்டுவதற்காக கண்விழித்தஅவர் அதன் பின்னர் தனது ஒருகையில் மகனும்ஒரு கையில் மகளுமாக உறங்கச்சென்றார்.கணவர் அருகில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அதற்கு ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் அந்த வெடிப்புச்சத்தம் இடம்பெற்றது.

நான் எனது கணவருக்காகவும் குழந்தைகளிற்காகவும் கதறினேன் என அவர் கண்ணீர் விட்டபடி குழந்தைகளின் போர்வைகளை தனது நெஞ்சில்வைத்து ஆட்டியபடி தெரிவித்தார்.

அவர்களின் அப்பா என்னை தனியாக விட்டுவிட்டுஇரண்டு பிள்ளைகளுடனும் போய்சேர்ந்துவிட்டார் என அவர் குறிப்பிட்டார்.

காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இஸ்ரேல் பொதுமக்கள் பெருமளவில் வசிக்கும் வீடுகளை தொடர்ச்சியாக தாக்கிவருகின்றது.

ஒக்டோபரில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட ரபா தற்போது பெரும் அழிவை ஏற்படுத்தும் தரைவழிதாக்குதலின் அடுத்தஇலக்காக காணப்படுகின்றது.

இந்த தாக்குதல்கள் முன்னெச்சரிக்கை இன்றி இடம்பெறுகின்றன -வழமையாக நள்ளிரவில்.

பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதாக தெரிவிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பே இதற்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றது.

ஹமாஸ் தனது அமைப்பினரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தியுள்ளது சுரங்கப்பாதைகளை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது அதேபோன்று ரொக்கட் லோஞ்சர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படுகின்றன என்கின்றது இஸ்ரேல்.

எனினும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லும் தனது தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் எதனையும் தெரிவிப்பதில்லை.

இந்த குறிப்பிட்டதாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்காத இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை பின்பற்றுவதாகவும் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அபுஅன்சாவின் வீட்டில் கொல்லப்பட்ட 14 பேரில் ஆறுபேர் சிறுவர்கள் நான்கு பேர் பெண்கள் என உடல்கள் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அல் ஹாம்ஸ் தெரிவித்தார்.

தனது கணவர் பிள்ளைகளை இழந்த ரனியா தனது சகேதாரி கர்ப்பிணியான மற்றுமொரு பெண் உட்பட பல உறவினர்களை இழந்தார்.

தாக்குதல் இடம்பெற்றவேளை வீட்டில் 35 பேர் காணப்பட்டனர் என தெரிவித்த பாரூக் அபு அன்சா என்ற உறவினர் இவர்களில் சிலர் வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களை சேர்ந்த எவரும் அங்கு இருக்கவில்லை என தெரிவித்தார்.

ரனியாவிற்கும் கணவருக்கும் 29 வயது கடந்த ஒரு தசாப்தகாலமாக அவர்கள் பிள்ளைக்காக பல தடவை தங்களை மருத்துவகிசிச்சைகளிற்கு உட்படுத்திக்கொண்டனர்.

இரண்டு தடவை தோல்வியடைந்த ஐவிஎவ் சிகிச்சைக்கு பின்னர் மூன்றாவது ஐவிஎவ் சிகிச்சையின் பின்னர் கடந்த வருட ஆரம்பத்தில் அவர் கர்ப்பம் தரித்தார்.

ஒக்டோபர் 13ம் திகதி இரட்டையர்கள் பிறந்தனர்.

கூலித்தொழிலாளியான அவரது கணவர் பெண்பிள்ளைக்கு தாயின் பெயரையே வைக்கவேண்டும் என அடம்பிடித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version