பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

Share.
Leave A Reply

Exit mobile version