முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜன.24-ஆம் திகதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜன.27ஆ ம் திகதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (28) அதிகாலை சாந்தன் காலமானார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், மரணமடைந்தார்.

இன்று சாந்தனின் உடல் விமானம் மூலமாக இலங்கை கொண்டு வரப்படவுள்ளது.

சாந்தனின் இறுதி ஆசை தன் தாயை சந்திக்க வேண்டும் என்பதே ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற காலம் மறுத்துவிட்டது. ஆனாலும் கற்பனையில் அந்த கனவுக்கு இந்த ஓவியம் உயிர் கொடுத்திருக்கிறது. இந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version