மருமகனால் தாக்கப்பட்டு காயமடைந்த மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் ஹொரவபொத்தான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவபொத்தான , முக்கரவெவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவராவார்.

சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மகளுக்கும் அவரது கணவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இவர் இருவருக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்ற து மகருமகன் அவரை பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஹொரவபொத்தான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version