சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து விட்டார் ஜோன் சீனா. இதனால், அரங்கே சில நிமிடம் திக்குமுக்காடிப்போய், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
96வது அகாடமி விருது விழா இன்று காலை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெற்று வருகிறது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக ஒஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கி வருகிறார்.
பார்பி படத்தில் வரும் காட்சியுடன் ஒஸ்கர் விருது விழா ஆரம்பம் ஆனது. சிறந்த தழுவல் திரைப்படத்துக்கான விருதை அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘The Boy and the Heron’ திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றார்.
மேலும், கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர் திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகராக சிலியன் மர்பி,சிறந்த துணை நடிகராக ரொபர்ட் டவுனி ஜூனியர், திரைப்பட எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காகவும் விருதை வென்றது.
ரசிகர்களை வியக்க வைத்த ஜோன் சீனா: