சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.

அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version