உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், ’கிரியேட் ஆன் இந்தியா’ இயக்கத்தை உருவாக்கிட டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய படைப்பாளிகள் விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்கப்பூர்வமாக சிறந்து விளங்கிய 23 படைப்பாளிகளுக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி விருதுகளை வழங்கி வைத்திருந்தார்.

இதற்கமைய, சிறந்த கதை சொல்லிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியின் காலில் கீர்த்திகா கோவிந்த சாமி விழுந்தார். பதிலுக்கு பிரதமரும் காலை தொட்டு வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version