கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்து இன்று (13) விபத்துக்குள்ளானது.

விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

பொலிஸாரே இவ்வாறு அதிக வேகத்தில், ஆபத்தான விதத்தில் பயணம் செய்யும் நிலையில் பொதுமக்களை எவ்வாறு அவர்கள் நல்வழிப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version