புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ) மூலம் உறுதி செய்யப்படும். இதன் அடிப்படியில் எந்த மாணவரும் பரீட்சை தோல்வியடைபவராக கருத்தப்படமாட்டார்.

விஞ்ஞானம், கணிதம், தாய்மொழி, ஆங்கிலம், சமயம் , ஒழுக்கக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கான க.பொ.த. O/L பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டு முதல் நடத்தவுள்ளது.

இந்த திட்டம் 2025 முதல் பாடசாலைகளில் தொடங்கப்படும், இந்த மாற்றத்தின் அடிப்படியில் 2026 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்.

மேலும் ஏ, பி சி பெறுபேறுகளை பதிலாக மாணவர்களுக்கு ஜிபிஏ (சராசரி புள்ளி) வழங்கப்படும் .

இந்த புதிய முறையின்படி, ஒவ்வொரு பரிட்சார்த்தியும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மதிப்பெண்களுடன் தோல்வி மதிப்பெண்கள் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை தொடர முடியும் .

இதன் மூலம் வருடாந்தம் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த உயர்தர கல்விக்கு தகுதி பெற முடியும் என கல்வி மறுசீரமைப்பு நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் .

Share.
Leave A Reply

Exit mobile version