நடிகை நயன்தாரா விளம்பரங்களில் நடிக்க பல கோடி ரூபாய் டிமாண்ட் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது, அதிலும் அவர் டிமாண்ட் வைத்த அமௌன்ட் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை தூக்கிவாரிபோட்டுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அறிமுகம் தேவையில்லை. இவரை தெரியாதவர்கள் இருக்கமுடியுமா. சரத்குமாரின் ஐயா படத்தில் பவ்வியமாக நடித்த நயன்தாராவா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும்படி இவரின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது.
இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். அதிலும் அஜித்தின் பில்லா படத்தில் பிகினி உடையில் தொன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திணறடித்துவிட்டார்.
நயனின் அழகில் மயங்கிடாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கிளாமரில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
அதிலும் சிம்புவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் இந்த கிசுகிசுக்கள் தான் இவரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. ஆதாவது எப்போதும் ஹெட்லைனாக ஓடிக்கொண்டே இருப்பார்.
இப்படியாக சினிமா ஒரு பக்கம், கிசுகிசு மறுபக்கம் என இவரின் திரை வாழ்க்கை வலியுடையதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைத்து பணியாற்றினார்.
படப்பிடிப்பின் பொது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி பின்னர் அது காதலாக மலரத் தொடங்கியது.
அந்தவகையில் தற்போது விளம்பரங்களிலும் நான் யார் என்பதை நிருத்தித்துள்ளார், நயன். சில நிமிட விளம்பரங்களுக்கு கோடி கணக்கில் டிமாண்ட் வைத்துள்ளார்.
அதன்படி ஸ்லைஸ் என்ற மாம்பழ ஜூஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க சும்மர் 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இனி தன்னை தேடி வரும் விளம்பரங்களுக்கு அதிகமாக பேமண்ட் கேக்கவுள்ளார் என கூறுகின்றனர். ஜவான் படத்திற்கு பின் தனது சம்பளத்தையே இருமடங்காக அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.