“லாட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும். அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை வென்ற பெண்கள் பலர் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு பெண் தவறுதலாக பொத்தானை அழுத்தி ரூ.8 கோடி பரிசு வென்ற சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியை சேர்ந்தவர் மிரியம் லாங்க். இந்த பெண் கடந்த மாதம் 18-ந்தேதி மெகா மில்லியன் லாட்டரி சீட்டு வாங்க பிளாஸ்பெர்க் பகுதியில் உள்ள ஒரு விற்பனையகத்துக்கு சென்றார்.
அங்கு வெர்ஜினியா லாட்டரி வாங்குவதற்காக பல விருப்பங்கள் உள்ளன. ஆனால் முதல் முறையாக லாட்டரி வாங்க மிரியம் லாங்க் லாட்டரி விற்பனை எந்திரத்தில் வாங்கும் பணியை தொடங்கினார்.
அவர் மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக பவர் பால் லாட்டரி பொத்தானை தவறுதலாக அழுத்தினார்.
பவர் பால் டிக்கெட் எண் பொருந்தும் சீட்டானது, அதிகபட்ச எண்ணிக்கையுடன் பொருந்துபவர் பரிசை வெல்வார்.
இந்நிலையில் மிரியம் லாங்க், தவறாக பவர் பால் லாட்டரி பொத்தானை அழுத்திய நிலையில், அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பரிசு கிடைத்தது.
இதனால் மகிழ்ச்சியில் திளைத்த மிரியம் லாங்க் கூறுகையில், இந்த லாட்டரியை வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை.
ஆனால் நான் தவறுதலாக பொத்தானை அழுத்தினேன். பவர் பால் லாட்டரி சீட்டு வந்தது. அதனால் தவிர்க்க முடியாமல் அதை தேர்ந்தெடுத்தேன் என்றார்.”,