“சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள், புகைப்படங்கள் பயனர்களை ரசிக்கவும், சிந்திக்கவும், முகம் சுளிக்கவும் வைக்கின்றன.

அந்த வகையில், எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

விமானத்தில் பயணிக்கும் போது, பயணிகள் சில அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் எவருக்கும் இடையூறு செய்யாமலோ அல்லது தொந்தரவு செய்யாமலோ பயணிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத அளவுக்கு அடையாளம் தெரியாத காதல் ஜோடியின் செயல் அமைந்துள்ளது.

விமான இருக்கையில் ஒரு ஜோடி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள பயனர், விமானத்தில் என் பார்வையை நம்ப முடியவில்லை 4 மணி நேர விமானம் முழுவதும் இப்படித்தான் இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு 21 மில்லியன் பார்வைகளுடன் வைரலாகியுள்ளது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பயனர், ”விமானப் பணிப்பெண் எப்படி எதுவும் சொல்லவில்லை?\” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version