கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் சுமார் பத்து அடி பள்ளத்தில் நீர் தேங்கி இருக்கின்றது.

குறித்த பாலத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வழமையாக குளித்து வந்த நிலையில் நேற்றையதினம் (11.04.2024) குறித்த இடத்தில் குளித்த போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இன்றையதினம் (12.04.2024) சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேவிபுரம் பகுதியை சேர்ந்த முனிசாமி திருச்செல்வம் என்ற 57 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version