உலகிலேயே மிகவும் நீளமான அதேவேளையில் உடல் பருமனான பாம்பு இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாம்பு 4 கோடியே 70 இலட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பானந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு சில எலும்புகள் புதை படிமங்களாக கிடைத்தன. அப்போது முன்காலத்தில் வாழ்ந்த இராட்சத முதலை இறந்து பூமிக்கடியில் புதைந்து இருக்கலாம் எனவும், அதன் எலும்புகள் தான் புதை படிமங்களாக இப்போது கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் அந்த எலும்புகள் முதலைக்குரியது தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அந்த புதைப்படிம எலும்புகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. அந்த எலும்புகள் எந்த உயிரினத்துக்கானது என்பது பற்றிய ஆய்வு தொடங்கப்பட்டது.

கடந்த 2022ல் ஆய்வு தீவிரமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் தான் அந்த ஆய்வில் திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது. ‛‛Largest Known madsoiid snake from warm eocene period of Inida suggests Intercontinental Gondwana Dispersal’’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ‛ஜர்னல் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ எனும் தலைப்பில் ‛ஸ்பிரிங்கர் நேச்சர்’ இணையதளத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பூமியில் 50 அடி இராட்சத பாம்பு வாழ்ந்து இருக்கிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் புதைப்படிமங்களாக கிடைத்த எலும்புகள் முதலைக்குரியது அல்ல. அது இராட்சத பாம்புக்குரியது. கட்ச் பகுதியில் கிடைத்த எலும்புகள் இராட்சத பாம்பு என்பது அனகோண்டா வகையை சேர்ந்தது.

உருவத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும். நீளமாகவும், பருமனாகவும் இருக்கும் இந்த பாம்பு மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டது. இது ஒரு இடத்தில் பதுங்கி பிற உயிரினங்களை வேட்டையாடி உணவாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டது. இப்பாம்பு இனத்துக்கு ‛வாசுகி இண்டிகஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது .

இந்த பாம்பு பொதுவாக சூடான பிரதேசத்தில் தான் வசிக்கும். குஜராத்தின் கட்ச் என்பதும் வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது. இது சுமார் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய Eocene காலத்தை சேர்ந்தது.

கொலம்பியாவில் இருந்ததாக கூறப்படும் டைட்டனோபோவாவை (Titanoboa) விட இந்த பாம்பு நீளமானது. இந்த இனம் இந்தியாவில் அழிந்து விட்டது. இந்தியா-ஆசியா மோதல் காரணமாக இந்தியாவில் இருந்து தெற்கு யூரேசியா வழியாக வடஆப்பிரிக்காவிற்கு இந்த பாம்புகள் சென்று இருக்கவும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version