இஸ்­ரே­லுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான போர்ப் பதற்றம் அதி­க­ரித்­துள்ள இந்­நி­லையில், ஈரான், இஸ்ரேல், படை வல்­லமை குறித்து ஆராய்­வது அவ­சி­ய­மாகும். மத்­திய கிழக்குப் பகு­தி­களில் காட்­சிகள் பாரி­ய­ளவில் மாறி­வ­ரு­கி­றது.

காசாவை இஸ்ரேல் முற்­று­கை­யிட்டு இருந்­தது. ஆனால், ஈரான் எப்­போது வேண்­டு­மா­னாலும் தாக்­குதல் நடத்­தலாம் என்­பதால் இஸ்ரேல் காசாவின் கான்­யூனிஸ் நக­ரி­லி­ருந்து தங்கள் படை­களை வாபஸ் பெற்று வரு­வ­தாகத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஈரான் விமா­னப்­ப­டையின் பலம் குறை­வாக இருந்­தாலும், ஈரானின் ஏவு­கணை பலம் அதன் இரா­ணுவ பலத்தின் முக்­கிய அம்­ச­மாக உள்­ளது. மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் அதி­க­ள­வி­லான ஏவு­க­ணை­களை ஈரான் வைத்­தி­ருக்­கி­றது என்று அமெ­ரிக்கப் பாது­காப்­புத்­துறை தெரி­வித்­துள்­ளது.

அவற்றில் பெரும்­பா­லா­னவை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் மற்றும் நடுத்­தர தொலை­வுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவு­க­ணைகள் அதி­க­மா­க­வுள்­ளன.

ஏவு­க­ணைகள் இன்னும் வேக­மாக பய­ணிப்­ப­தற்­காக, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவு­க­ணை­களைத் தயா­ரிக்கும் நோக்கில் தங்கள் விண்­வெளி தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்­தவும் ஈரான் முயற்சி மேற்­கொண்­டுள்­ளது.

ஈரான் இரா­ணு­வத்தில் பல்­வேறு நிலை­களில் 523,000 வீரர்கள் இருப்­ப­தாக பிரித்­தா­னி­யவைச் சேர்ந்த சர்­வ­தேச இரா­ணுவ ஆய்­வுகள் நிலையம் கூறி­யுள்­ளது. இதில் வழக்­க­மான இரா­ணுவப் பணியில் உள்ள 350,000பேரும், இஸ்­லா­மிய புரட்சிப் பாது­காப்புப் படைப் பிரி­வு­களில் உள்ள 150,000பேரும் அடங்­குவர்.

இஸ்­லா­மிய புரட்சிப் பாது­காப்புப் படைப் பிரி­வு­களின் கடற்­படைப் பிரி­வு­களில் 20,000பேர் உள்­ளனர். ஹோர்முஸ் நீரிணை பகு­தியில் ஆயுதம் ஏந்­திய கண்­கா­ணிப்புப் பட­கு­களை இந்தக் குழு இயக்கி வரு­கிர­றது. உள்­நாட்டு புரட்­சியை ஒடுக்­கு­வ­தற்கு உத­விய தன்­னார்­வலர் படைப்­பி­ரி­வான பாசிஜ் பிரி­வையும் இஸ்­லா­மிய புரட்சிப் பாது­காப்புப் படைப்­பி­ரி­வு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கி­றது.

இப்­ப­டைப்­பி­ரிவு பல நூறா­யிரம் பேரை திரட்டும் திறன் கொண்­டது. ஈரானில் இஸ்­லா­மிய அமைப்பு முறையைப் பாது­காப்­ப­தற்­காக 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இஸ்­லா­மிய புரட்சிப் பாது­காப்புப் படை பரிவு உரு­வாக்­கப்­பட்­டது. அப்­போ­தி­ருந்து முக்­கி­ய­மான இரா­ணுவ, அர­சியல் மற்றும் பொரு­ளா­தார சக்­தி­யாக அது செயல்­பட்டு வரு­கி­றது.

வழக்­க­மான இரா­ணு­வத்தை விட இதில் உள்ள வீரர்­களின் எண்­ணிக்கை குறை­வுதான் என்­றாலும், ஈரானில் வலி­மை­யான இரா­ணுவ படைப் பிரி­வாக இது கரு­தப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்­காவால் கொல்­லப்­பட்ட ஜெனரல் காசெம் சுலை­மானி தலை­மையில் செயல்­பட்டு வந்த ‘குட்ஸ்’ படைப் பிரிவு, வெளி­நா­டு­களில் இர­க­சிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­தது.

நேர­டி­யாக ஈரான் ஜனா­தி­பதி அய­துல்லா அலி கமா­னி­யுடன் தொடர்பில் உள்ள பிரிவு அது. அதில் 5,000பேர் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது. அந்தப் பிரிவு தற்­போது சிரி­யாவில் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உலகின் மிக சக்­தி­வாய்ந்த இரு­பது இரா­ணு­வங்­களில் ஒன்­றான இஸ்­ரேலின் மொத்த இரா­ணுவ பலம் தொடர்பில் பல முரண்­பா­டான தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இஸ்­ரே­லிடம் 601 அதி­ந­வீன இரா­ணுவ விமா­னங்­களும் தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்தும் வகையில் 48ஹெலி­கொப்­டர்­களும் 2,200 இரா­ணுவ டாங்­கி­களும் உள்­ளன. 300 பல­முனை ரொக்கெட் வீச்சு அமைப்­புகள் உட்­பட 1,200 பீரங்­கி­களும் இஸ்ரேல் இரா­ணு­வத்­திடம் உள்­ளன.

7 இரா­ணுவ கப்­பல்­களும் 6 நீர்­மூழ்கி கப்­பல்­களும் உள்­ளன. மொசாட் உட்­பட உலகின் மிகவும் திறன்­மிக்க உள­வுத்­துறை அமைப்பை இஸ்ரேல் கொண்­டுள்­ளது. இரா­ணு­வத்­திற்­காக 2022ல் மொத்தம் 23.4பில்­லியன் டொலர்­களை இஸ்ரேல் செல­விட்­டுள்­ளது.

ஆனால் 2021இல் செல­விட்­டுள்ள தொகையில் இருந்து இது 4.2சத­வீதம் குறைவு என்றே கூறப்­ப­டு­கி­றது.

அத்­துடன் அமெ­ரிக்­கா­விடம் இருந்து ஆண்­டுக்கு 3 பில்­லியன் டொலர்கள்; நிதி­யு­த­வியை இஸ்ரேல் பெற்று வரு­கி­றது. 2016இல் அமெ­ரிக்க 10 ஆண்­டு­க­ளுக்­கான சுமார் 38 பில்­லியன் டொலர்கள்; ஆயுத ஒப்­பந்தம் ஒன்றை மேற்­கொண்­டது. இதில் 5 பில்­லியன் டொலர்கள்; தொகைக்கு ஏவு­கணை வாங்க பயன்­ப­டுத்­தப்­படும் என்றே கூறப்­பட்­டது. கடந்த 20 ஆண்­டு­களில் இரா­ணுவ உத­விக்­கென சுமார் 58 பில்­லியன் டொலர்கள்; தொகையை அமெ­ரிக்கா இஸ்­ரே­லுக்கு அளித்­துள்­ளது.

இரண்டாம் உல­கப்­போரின் பின்னர், 26 மே 1948ஆம் ஆண்டில் அன்­றைய பாது­காப்பு அமைச்சர் டேவிட் பென்-­கு­ரி­யனின் உத்­த­ர­வின்­படி, ஹகானா துணை இரா­ணுவப் படை­கு­ழு­வி­லி­ருந்து படைக்கு கட்­டாய ஆட்­சேர்க்கும் இரா­ணு­வ­மாக போராளிக் குழுக்­க­ளான இர்குன், லெகி என்­ப­வற்றை உள்­வாங்கி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இஸ்­ரேல பாது­காப்புப் படைகள் உரு­வாக்­கப்­பட்­டன.

இஸ்­ரேல இரா­ணு­வத்தின் குறிப்­பி­டத்­தக்க இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளாக இஸ்ரேல் விடு­தலைப் போர் 1948–1949இலும் பழிக்­குப்­பழிப் படை நட­வ­டிக்­கைகள் 1950ள–1960இலும் நிகழ்ந்­தன. 1956 சூயெஷ் நெருக்­கடி, அதன்­பின்னர் 1967இல் ஆறு நாள் போர், தேய்­வ­ழிவுப் போர் 1967–1970இலும், யோம் கிப்பூர்ப் போர் 1973இலும் நிகழ்ந்­தன.

1978இல் தென் லெபனான் போர், அதன்பின் முத­லா­வது லெபனான் போர் 1982இலும், மீண்டும் தென் லெபனான் போர் 1982–2000, அதன்­பின்னர் முதல் தடுப்­பெ­ழுச்சிப் போராட்டம் (1987–1993), இரண்டாம் தடுப்­பெ­ழுச்சிப் போராட்டம் (2000–2005), இரண்­டா­வது லெபனான் போர் (2006), காசா போர் (2008–2009) ஆகிய போர்­களில் இஸ்­ரே­லிய இரா­ணுவம் பங்­கேற்­றது.

குறு­கிய காலத்தில் இஸ்ரேல் பாது­காப்புப் படைகள் ஈடு­பட்ட போர்­களின் எண்­ணிக்கை, எல்லை முரண்­பா­டுகள் என்­பன அவற்றை உல­கி­லுள்ள அதிக சமர் பயிற்சி (அனு­பவம்) பெற்ற இரா­ணு­வங்­களில் ஒன்­றாக்­கி­யுள்­ளது. அதே­வேளை அவை மூன்று முன்­நி­லை­களில் இயங்­கு­கின்­றன.

வடக்கில் லெப­னா­னுக்கும் சிரி­யா­வுக்கு எதி­ரா­கவும், கிழக்கில் யோர்­தா­னுக்கும் ஈராக்­கிற்கும் எதி­ரா­கவும், தெற்கில் எகிப்­துக்கு எதி­ரா­கவும் ஆகும். 1979இல் எகிப்­து-­இஸ்ரேல் சமா­தான ஒப்­பந்­தத்தின் பின், அவை கவ­னத்தை தென் லெபனான் மற்றும் பாலஸ்­தீன நிலப்­ப­கு­திக்கு திருப்­பி­யுள்­ளன.

இஸ்ரேல் காசாவின் கான் யூனிஸ் நக­ரி­லி­ருந்து தங்கள் படை­களை வாபஸ் பெற்று வரு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இஸ்ரேல் இதற்கு வேறு ஒரு விளக்­கத்தைக் கொடுத்­துள்­ளது. அதா­வது ஹமா­ஸ{க்கு எதி­ரான போர் ஆறு மாதத்தை எட்­டி­யதால் அங்கு தனது திட்­டத்தை முடித்­து­விட்டே திரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பிடத் தகுந்த அள­வுக்கு வீரர்கள் வெளி­யே­றி­னாலும் கூட மீத­முள்ள வீரர்கள் அங்­கேயே இருந்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களைக் கவ­னிப்­பார்கள் என்றே இஸ்ரேல் தெரி­வித்­துள்­ளது. இஸ்ரேல் பாது­காப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் வேறு ஒரு விளக்­கத்தைக் கொடுத்­துள்ளார்.

அதா­வது காசாவின் தெற்கே எகிப்தின் எல்­லையில் உள்ள ரஃபா நக­ரத்தின் மீது தாக்குதலுக்குத் தயாராகும் வகையிலேயே ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அவர் கூறியுள்ளார். இன்னமும் பல ஆயிரம் ஹமாஸ் படை இருப்பதால் எகிப்து அருகே உள்ள நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பல வாரங்களாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரஃபே நகரில் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பதால் அங்குத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பு அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version