– புலம்பெயர் தமிழ் தரப்புகள் போர்க்கொடி
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்தார் என நீதிமன்றம்குற்றம்சாட்டிய இலங்கையின் பொலிஸ்மா அதிபரை கனடாவின் மிகப்பெரிய பொலிஸ் பிரிவின் தலைவர் ஒருவர் சந்தித்துள்ளார்.
சிலோன்டுடே உட்பட இலங்கையின் ஆங்கில செய்தித்தாள்களில் வெளியான படங்கள் பீல்peel பிராந்திய பொலிஸ் தலைவர் நிசான் துரையப்பா 2023 டிசம்பர் 29ம் திகதி இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சீருடையில் காணப்படுவதை காண்பித்துள்ளன.
இந்த படத்தில் காணப்படும் இலங்கையின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளில் ஒருவர் இலங்கையின் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் – ஒருமாதத்திற்கு முன்னரே சந்தேகநபர் ஒருவரை ஈவிரக்கமின்றி தாக்கினார் என தெரிவித்து இவர் இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சந்திப்பை கனடாவின் கௌரவத்தின் மீது விழுந்த கறை என தமிழ் கார்டியன் ஆசியர் வைத்தியர் துசியன் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பலதுஸ்பிரயோகங்களிற்கு காரணமான தேசத்தின் அணிவகுப்பு மரியாதையை துரையப்பா போன்ற கௌரவத்திற்குரிய ஒருவர் பெற்றுக்கொள்வதை பார்க்கும்போது அது அதிர்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பான பேட்டிக்காக நாங்கள் விடுத்த வேண்டுகோளை துரையப்பா நிராகரித்துள்ளார்.
எனினும் பீல்பிராந்திய பொலிஸ் பேச்சாளர் துரையப்பாவின் இலங்கை விஜயம் தனிப்பட்டது என தெரிவித்துள்ளதுடன் பீல் பிராந்திய காவல்துறைக்கும் இலங்கை காவல்துறையின் எந்தவொருஅமைப்பிற்கும் இடையில் எந்த தொடர்பும் ஒத்துழைப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நீங்கள் சீருடையை அணிந்தீர்கள் என்றால் நீங்கள் தலைவர் என தெரிவிக்கப்படும் அந்த அமைப்பினை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேன் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய நாட்டை வம்சாவளியாக கொண்ட ஒரேயொரு பொலிஸ் தலைமை அதிகாரி துரையப்பா.
பிரம்டன் ஒன்டாரியோபோன்றவற்றிற்கான பீல் பொலிசின் தலைவர் இவர்.
பீலில் வளர்ந்த என்னை போன்றவர்களிற்கும் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தும் பீலில் வசிக்கும் அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் என்கின்றார் ராதிகா சிற்சபேசன்.
தான் பிறந்த நாட்டிற்குகுடும்பத்தினருடன் விடுமுறைக்காக சென்றிருந்தவேளை விடுக்கப்பட்ட அழைப்பையே துரையப்பா ஏற்றுக்கொண்டார் என பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
படங்களில் காணப்படுவதற்கு அப்பால் தென்னக்கோனை துரையப்பா நேரடியாக சந்தித்தாரா என்பதை பேச்சாளர் உறுதி செய்ய மறுத்துள்ளார்.
புகைப்படங்களில் காணப்பட்டது மாத்திரம் தான் சந்திப்பா அல்லது வேறு சந்திப்புகள் இடம்பெற்றனவா என்பது தெளிவாக தெரியவில்லை.
புகைப்படத்தில் காணப்படும் தருணத்திற்கு அப்பால் துரையப்பாவும் தென்னக்கோனும் வேறு ஏதும் சந்திப்புகளில் ஈடுபட்டார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
கொழும்பில்சந்திப்பிற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் குறித்து துரையப்பா கனடாவின் வெளிவிவகாரங்களிற்கான பிரிவு மற்றும் ஆர்சிஎம்பியுடன் ஆராய்ந்தார் எனவும் பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.’
இதேவேளை தென்னக்கோன் குறித்தும் நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் நாங்கள் துரையப்பாவிற்கு தகவல் வழங்கினோம் என ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கம் இந்த விஜயத்தினை ஏற்பாடு செய்யவில்லை.இது தனிப்பட்ட விஜயமாக கருதப்பட்டது என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
எனினும் பீல் பொலிசுடன் எங்களின் நெருங்கிய தொடர்புகள் காரணமாக எங்களின் இலங்கை;கக்கான அதிகாரியொருவர் இலங்கையின் பொலிஸ் பிரிவுகளுடன் துரையப்பாட ஈடாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தார் எனவும் அவர் தெரிவித்;துள்ளார்.
நிலைமையை துரையப்பா அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக துரையப்பாவிற்கு இலங்கை நீதிமன்றம் அந்த நாட்டின் பொலிஸ் அதிகாரிதொடர்பில் வழங்கியதீர்ப்பு உட்படபல விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை வரலாறினை கருத்தில் கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருந்திருக்கவேண்டும் என்கின்றார் ராதிகா சிற்சபேசன்.
இடம்பெற்ற குற்றங்கள் குறித்து கனடாவிற்கு நன்கு தெரியும் இது ஒட்டாவாவிற்கு தெரியாத விடயம் இல்லை என்கின்றார் நந்தகுமார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு மேற்குலகின் பொலிஸ் அதிகாரிகள்விஜயம் மேற்கொள்வது ஒத்துழைப்பு வழங்குவது பயிற்சி வழங்குவது புதிய விடயமல்ல என்ற போதிலும் சில நாடுகள் தங்களை சமீபத்தில் இலங்கை அதிகாரிகளிடமிருந்து தனிமைப்படுத்தியுள்ளன.
2021 இல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்கொட்லாந்து தனது பயிற்சிகளை முடிவிற்கு கொண்டுவந்தது.
இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில் செயற்படுகின்றார்கள் என்பதை பொலிஸ் தலைவராக தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை வெளிப்படுத்துகின்றது என்கின்றார் நோர்த் கரோலினாவின் வேக்பொரெஸ்ட் பல்கலைகழக பேராசிரியர் நெய்ல் டெவொட்டா.
பொலிஸ் தலைமையகத்திற்கான துரையப்பாவின் விஜயம் அவரது மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்புகின்றது என்கின்றார் நந்தகுமார்.
கனேடிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரியொருவர் மோசமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படையினரை சந்திக்கசென்றது அது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது இதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்கின்றார் நந்தகுமார்.
globalnews-தொடர்புடைய செய்தி-
Peel police chief met Sri Lankan officer a court says ‘participated’ in torture