யாழ்ப்பாணத்தில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைந்துள்ளார்.
கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நினைவாலயமானது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இந்த நினைவாலயமானது அமைக்கப்பெற்றுள்ளது.
அன்று கந்தசாமி உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.
அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில் தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை ஒரு நல்வழிப்படுத்த சந்தர்ப்பங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.