அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் இந்த ஆய்வுக் கப்பல், எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு போன்ற வசதிகளைப் பெறுவதற்காக இலங்கைக் கடற்கரைக்குள் நுழைவதற்கு அனுமதி கோரியுள்ளது.

இந்த கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பி தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரிய போதும், இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. முன்னதாக, சீன ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version