யாழ்ப்பாணம் – அச்சுவேலி உள்ள பத்தமேனி பகுதியில் நேற்று (27) இரவு வீடொன்றுக்குள் நுழைந்து இருவர் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து, சந்தேக நபர்கள் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வன்முறையின்போது அவ்வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேன் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் தாக்குதலில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழிலில் உள்ள போட்டியே இந்த வன்முறை தாக்குதலுக்கு காரணம் என அச்சுவேலி பொலிஸார் சந்தேகிப்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version