இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், சகல எரிபொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

லங்கா டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 333 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 215 ரூபாவாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version