யாழ். சாவகச்சேரி, கைதடி- நுணாவில் பகுதியின் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) காலை 5 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி பயணித்த உழவவு இயந்திரத்துடன், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை கொழும்பில் இருந்து ஏற்றிக் கொண்டு யாழ். நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் (இரு சக்கர உழவியந்திரம்) பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதியும் அதில் பயணித்த மேலும் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.