புங்குடுதீவு பகுதியில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எழும்பு கூட்டு எச்சங்கள் வெளிவந்தன.

அதனை அடுத்து , கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து , அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில் நாளைய தினம் வியாழக்கிழமை அவ்விடத்தில் நீதவான் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

கடற்தொழிலுக்கு சென்ற புங்குடுதீவை  சேர்ந்  முதியவர் சடலமாக மீட்பு

யாழில் மீன் பிடிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

Share.
Leave A Reply

Exit mobile version