லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3940 ரூபாவாகும்.
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1582 ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை 740 ரூபாவாகும்.