சென்னை: பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிவருபவர்.

அவர் பேசுவதில் எதுவுமே உண்மை இல்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து அப்படி பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் நடிகை ஜோதிகா குறித்து கடந்த சில காலமாகவே பல விஷயங்களை பேசிவருகிறார் பயில்வான். அது ஒவ்வொன்றும் அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது.

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.

அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது.

அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

தொடர் பஞ்சாயத்து: பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசுவதை பல செலிபிரிட்டிகள் கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர்.

ஆனால் ரேகா நாயர், கே.ராஜன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் மட்டும் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுகின்றனர்.

முக்கியமாக ரேகா நாயர் நேரடியாக சண்டைக்கே சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஷால் பதிலடி: அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன் ஏதோ ஒரு கேள்வியை கேட்டு வைக்க; ‘அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது’ என்று மேடையில் அமர்ந்தபடியே மூக்குடைத்தார் விஷால்.

அதுமட்டுமின்றி பிசாசு பட சமயத்தின்போதும் இயக்குநர் பாலா பயில்வான் ரங்கநாதனுக்கு தரமான பல்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்புகூட ஒரு நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனை வைத்து செய்தார் ஷகீலா. .

இருந்தாலும் பயில்வான் ரங்கநாதனின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.

ஜோதிகா பற்றி பயில்வான்: இந்நிலையில் சமீபத்திய வீடியோவில் ஜோதிகா குறித்து பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

அந்த வீடியோவில் பேசிய அவர், “ஜோதிகா போதையில் ஏதும் உளறினாரா என்று தெரியவில்லை.

படத்தின் ப்ரோமோஷனுக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த அவர் பேட்டியும் கொடுத்துவிட்டு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார்.

ஜோதிகாவுக்கு சென்னை என்றால் வேப்பங்காய் என்று முன்பே நான் சொன்னேன். இப்போதும் சென்னை வந்த அவர் தனது மாமனார், மாமியாரை பார்க்கவில்லை.

அவர்களது முகத்தில்கூட முழிக்கக்கூடாது என்றுதான் மும்பைக்கே சென்றுவிட்டார்.

 வாக்களிக்காத பிரச்னை: ஏன் வாக்களிக்க வரவில்லை என்று கேட்டதற்கு வருடா வருடம் நான் வாக்களிக்கிறேன்.

இந்த முறை முக்கிய காரணங்களால் வர முடியவில்லை என்று சொல்கிறார். ஏன் மா ஜோதிகா வருடா வருடமா தேர்தல் நடக்கிறது.

ஆன்லைனில் எப்படி வாக்களிப்பீங்க. இதை யார் சொன்னார்கள் உங்களுக்கு. விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி கேட்டதற்கு, அது அவுட் ஆஃப் டாபிக் என்று சொன்னார். எனில் விஜய் அரசியலுக்கு வருவது ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லையோ” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version