இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்துள்ள பெஞ்சமின் நெட்டயன்யாகு இதனை தெரிவித்துள்ளார்

தனித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டால் நாங்கள் தனித்து நிற்போம் தேவைப்பட்டால் எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் தனது 76 வது சுதந்திரதினத்தை நெருங்குகின்றது என தெரிவித்துள்ள அவர் 1948ம் ஆண்டு யுத்தத்தின்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கு எதிராக ஆயுததடை விதிக்கப்பட்டிருந்தது எங்களிடையே உள்ள வலிமை வீரம் ஒற்றுமையுடன் நாங்கள் வெற்றிபெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் அனேகவிடயங்களில் நாங்கள் பொதுவான கருத்தை கொண்டிருந்தோம் சில விடயங்கள் குறித்து கருத்து முரண்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காணமுடிந்தது.என தெரிவித்துள்ளார்.

ரஃபாமீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டால் இது ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் – அமெரிக்கா

காசாவின்ரஃபாமீது இஸ்ரேல் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் அது ஹமாஸ் அமைப்பிற்கான மூலோபாய வெற்றியாக மாறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன்கேர்பி இதனை தெரிவித்துள்ளார்.

ரஃபாமீதான எந்த பாரிய நடவடிக்கையும் பேச்சுவார்த்தை மேசையில் ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்தாது என்பதே எங்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் ரஃபா அதிகளவு பொதுமக்கள் உயிரிழந்தால் இஸ்ரேல் பற்றிய ஹமாசின் திரிபுபடுத்தப்பட்ட கதைகளிற்கு மேலும் பல விடயங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் எனஅமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.

அவர்கள்ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version