பெய்ஜிங்: இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளராக சீனா உருவெடுத்துள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இரு நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி விகிதம், சுமார் 118.4 அமெரிக்க டாலர் என ஜிடிஆர்ஐ ( Global Trade Research Initiative) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $ 118.3 பில்லியன் டாலராக உள்ளது.

2021 – 2022 மற்றும் 2022 – 2023ஆம் ஆண்டுகளில் வாஷிங்டன், புது டெல்லியின் சிறந்த வர்தகர்களாக இருந்துள்ளது.

கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட விகிதத்தின் அளவு 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது போன நிதியாண்டில், 16.67 மில்லியன் டாலராக இருந்தது. அதேபோல், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் இரும்பு, பருத்தி நூல், துணிகள், கைத்தறி பொருட்கள், மசாலாப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பிளாஸ்டிக் மற்றும் லினோலியம் போன்ற பொருட்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விகிதம் கடந்த நிதியாண்டில் இருந்ததைவிட 3.24 சதவீதம் அதிகரித்து, $ 101.7 பில்லியன் டாலர்களாக உள்ளது.

அதே போல் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் 1.32% குறைந்து $ 77.5 மில்லியன் டாலராக உள்ளது.

இது 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை $ 78.54 பில்லியன் டாலராக இருந்தது. இறக்குமதியும் சுமார் 20 சதவீதம் குறைந்து $ 40.8 பில்லியன் டாலராக இருக்கிறது.

சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விகிதம் 0.6 சதவீதம் குறைந்துள்ளது.

இது கடந்த நிதியாண்டில் $ 16.75 மில்லியன் டாலரில் இருந்து $ 16.66 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

அதே சமயம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விகிதம் $ 44.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த நிதியாண்டில் $ 70.32 பில்லியன் டாலரில் இருந்து, $ 101.75 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

!மாறாக, அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விகிதம் 47.9 சதவீதம் அதிகரித்து $ 52.41 பில்லியன் டாலரிலிருந்து 77.52 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யயப்பட்ட பொருட்களின் விகிதம் 14.7 சதவீதம் அதிகரித்து, $ 35.55 பில்லியன் டாலரிலிருந்து $ 40.78 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகம் $16.86 பில்லியனில் இருந்து $ 36.74 பில்லியனாக உயர்ந்துள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2013 – 2014ஆம் ஆண்டு, 2017 – 2018ஆம் ஆண்டு, 2020 – 2021 ஆம் ஆண்டிலும், இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளராக சீனா இருந்தது.

சீனாவிற்கு முன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி, இறக்குமதியாளராக இருந்தது.

2021- 2022 மற்றும் 2022-2023ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தகராக இருந்தது.

2024ஆம் நிதியாண்டில், $ 118.4 பில்லியன் டாலர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி இறக்குமதியாளராக சீனா உள்ளது.

$118.3 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. $ 83.6 பில்லியன் டாலர்களுடன் UAE இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இறக்குமதியாளராக உள்ளது.

அதைத் தொடர்ந்து ரஷ்யா $65.7 பில்லியன் டாலர், சவுதி அரேபியா $43.4 பில்லியன் டாலர் மற்றும் சிங்கப்பூர் $35.6 பில்லியன் டாலர்களுடன் அடுத்த அடுத்த இடத்தில உள்ளன.

 

Share.
Leave A Reply

Exit mobile version