வடமராட்சி கிழக்கு கேவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து திங்கட்கிழமை (13) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரைவலை வாடி ஒன்றில் தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபட்டுவந்த குறித்த நபர் திடீரென அப்பகுதியிலிருந்து காணாமல் போனதை அறிந்த மீனவர்கள் தேடுதல் நடத்தினர்.

இதன் போது குறித்த குடும்பஸ்தர் அருகிலிருந்த கிணற்றுக்குள் சடலமாகக் காணப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அயலவர்கள் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுவருவதுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் மனோராசன் உடப்பு புத்தளம் பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உடற்று கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version