சூட்சுமமான முறையில் மணலில் மறைத்து கடத்தப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பாலை மரக்குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீசாலை – புத்தூர் வீதி ஊடாக மணலில் மறைத்து கடத்தப்பட்ட சுமார் 150 தீராந்திகள், கனகம்புளியடி சந்தி பகுதியில் வைத்து இன்று(12) அதிகாலை 4.30 அளவில் மீட்கப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் வாகனம் மற்றும் மரங்களை கைவிட்டு தப்பிச்சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version