சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் ( Agnès Callamard இன்று (16) இலங்கை சென்றுள்ளாா். எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவா் எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் டின் தெற்காசியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version