“சவக்கடல், சோதோம் குமாரா பட்டணம்.
சாக்கடல் எனும் சவக்கடலின் (DEAD SEA) ஒரு கரை இஸ்ரேல் நாட்டிலும், ஒரு கரை ஜோர்தான் நாட்டிலும் உள்ளது.
சவக்கடல் என்பது கடல் அல்ல, ஓர் ஏரி தான். ஜோர்தான் நதியின் ஒரு பகுதி தான் சவக்கடல்.
சாக் கடல் என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இஸ்ரேல், ஜோர்தான் ஆகியவற்றின் எல்லையிலும், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் ஜோர்தானிய பகுதியில் அமைந்துள்ளது.
67 கி.மீ. நீளமும், 18 கி.மீ. அகலமும் கொண்டது சவக்கடல். கடல் மட்டத்தில் இருந்து 1,237 அடி ஆழம் உடையது.உப்புக்கடல், சோதோம் கடல், நாறுகின்ற கடல், பேய்க்கடல் என பிற பெயர்களும் உண்டு.
அதிகளவு உவர்ப்புத்தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியாது இருப்பினும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் மட்டும் வாழ்கின்றன.
இதன் உவர்தன்மை மாறிக்கொண்டிருந்தாலும் இது தண்ணீரை விட 31.5 சதவீதம் அடர்த்தி அதிகளவு உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது.
கடல் தண்ணீரைவிட 6 முதல் 8 சதவீதம் அதிக உவர்ப்பு கொண்டது. இந்நீரை விட அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும்.
உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வரும் இடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.
விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கு அருகில் அமைந்திருந்ததாக விவிலிய ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் படி சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள் ஆபிரகாம் காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது. (ஆதியாகமம் 19:1-9).சவுல் அரசன் தாவீதை கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கண்மையில் உள்ள என்கேதியில் அமைந்துள்ளது.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ, உரிமம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
உப்புக்கடல் வரலாறு விவிலியத்தின்படி ஆபிரகாமும், அவரது சகோதரர் லோத்துவும் அவருடைய குடும்பத்தாரும் கானான் தேசத்தில் (இஸ்ரேல் தேசத்தில்) ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.
நீ ஒரு பக்கம் போனால் நான் வேறொரு பக்கம் போகிறேன்’ என்று சொன்னார்.எனவே, லோத்து தேசத்தைப் பார்வையிட்டார்.
தனது மிருகங்களுக்குத் தண்ணீரும் ஏராளமான புல்லும் இருந்த மிக நல்ல ஓர் இடத்தை அங்கே கண்டார். அது ஜோர்தான் நிலப்பகுதியாக இருந்தது.
லோத்து தன்னுடைய குடும்பத்தையும் மிருகங்களையும் கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்குப் போனார்.
கடைசியாக அங்கிருந்த சோதோம் நகரில் குடியேறினார்.சோதோம் நகரத்தார் ரொம்ப ரொம்ப கெட்ட மக்களாக இருந்தார்கள்.
இதனால் லோத்து மிகுந்த மனவேதனை அடைந்தார். ஏனென்றால் அவர் நல்லவராக இருந்தார். சோதோம் நகரத்தாரைப் பார்த்து கடவுளும்கூட மன வேதனைப்பட்டார்.
சோதோம் நகரமும் அதற்கு அருகிலிருந்த கொமோரா நகரமும் இப்படிக் கெட்டுப்போய் இருந்ததால் அவற்றை அழிக்கப்போவதாக லோத்துவிடம் அவர் எச்சரித்தார்;
அதற்காக இரண்டு தேவதூதர்களை அவரிடம் அனுப்பினார்.-
ஜெபலின் ஜான் (தொடரும்…)

