கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகள் சிலலை அச்சுறுத்தியுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தனது மனைவி மற்றும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தனது மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த 14ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சர், அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் துப்பாக்கிகளுடன் பிரதான வாயில் வழியாக விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, ​​அமைச்சரின் பாதுகாவலர்களிடம் உள்ள துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

இதனால், விமான நிலைய பாதுகாவலர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சரின் மனைவியின் பயணப் பொதிகளை ஏற்றிச் சென்ற போர்ட்டர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய போர்ட்டருக்கு 1,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என விமான நிலைய அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்னணியில், அமைச்சர் 700 ரூபாய் கொடுத்ததற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் தொடர்பில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்ட்டரை அறைந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறியதுடன், குருநாகலைச் சேர்ந்த போர்ட்டர் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றார்.

அப்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இல்லாததால், மறுநாள் காலை போர்ட்டரை திரும்பி வருமாறு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதன்பின்னர் அவர் பொலிஸ் நிலையம் செல்லவில்லை.

சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிடம் நாம் வினவியிருந்தோம்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்பிரசன்ன ரணவீர,

“அந்த நேரத்துல எனக்கு கோபம் வந்துடுச்சு. நான் கதைத்து அருகில் இழுத்துச் சென்றேன். நான் அவரை அறைந்தேன். அது உண்மைதான்.

Share.
Leave A Reply

Exit mobile version