மலதெனிய பிரதேசத்தில் வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொன்ற சந்தேக நபரை நல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்கப் நகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி சந்தேக நபரைக் கைது செய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version