கனமழை காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்த அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.30 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் படி, நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

களனி ஆறு, மகாவலி ஆறு, நில்வலா ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தண்டுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிராம ஓயா, உறு போகு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply

Exit mobile version