யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.