இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குறித்த நால்வரையும் கைது செய்துள்ள குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு. தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்திற்கு சந்தேக நபர்கள் நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.பி. எல் போட்டிகள் இடம்பெறுவதால் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று அணிகள், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version