ரஷ்ய – உக்ரைன் போருக்காக இலங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் வத்தளையிலும் அவரது மனைவி பொரளையிலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மனைவி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. R

Share.
Leave A Reply

Exit mobile version