“சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த ஜியாபாங்க் (23) என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்தார்.

இருவரும் விரைவில் நெருங்கிய நண்பர்களாகினர். இறுதியில் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஜியாபாங்க் குடும்பத்தினர் அவரது உறவை ஏற்கவில்லை என்ற போதிலும், லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.

சமீபத்தில் லீ-ஜியாபாங்க் ஜோடி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

லீயுடன் எதுவும் சாத்தியம் என்று அவர் கூறி உள்ளார்.லீயின் முதிர்ச்சி, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றால் அந்த பெண் ஈர்க்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.”,

Share.
Leave A Reply

Exit mobile version