டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க்கிற்குச் சம்பளமாய் 56 பில்லியன் டொலர் கொடுப்பதற்கு ஆதரவாக அதன் பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.

டெஸ்லாவின் பங்கு விலையைப் பொறுத்து அவரின் துல்லியமான சம்பளத் தொகை மாறுபடும். இது உலகின் பெரும் செல்வந்தரான மஸ்க் கடந்த ஆண்டு ஈட்டியதை விட 300 மடங்கு அதிகமாகும்.

இவ்வாண்டு ஆரம்பத்தில் டிலவேர் நீதிபதி, மஸ்க்கிற்குப் பரிந்துரைக்கப்பட்ட அவ்வளவு பெரிய சம்பளத் தொகையை நிராகரித்தார். இந்நிலையில் நிறுவனத்தை டிலவேரிலிருந்து டெக்சஸுக்கு மாற்றும் திட்டத்தையும் பங்குதாரர்கள் அங்கீகரித்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து தப்புவதற்கு அது உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.

மஸ்க்கிற்கு மிதமிஞ்சிய சம்பளம் கொடுக்கப்படுவதற்கு எதிராகச் சிறிய முதலீட்டாளர் ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார். சம்பளம் நியாயமற்றது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் பங்குதாரர்களின் அண்மைய வாக்களிப்பை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version