ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸின் (France) வெதுப்பக உரிமையாளர் (Baker) தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று (15.07.2024) மாலை 6.00 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது. மேலும் பரிஸில் 3ஆவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய ஊர்வலம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இலங்கையிலிருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றடைந்த தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளார்.


Share.
Leave A Reply

Exit mobile version