“கிட்டத்தட்ட ‘Kalki 2898 AD’ படம் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்திருக்கிறது. படக்குழுவின் உழைப்புதான் இதற்கு காரணம்!” – அமிதாப் பச்சன்

“பிரபாஸுக்கு வேண்டுமானால் 1000 கோடி ரூபாய் வழக்கமானதாக இருக்கலாம். ஆனால், எனக்கு இது பெரிய விஷயம்” என்று `Kalki 2898 AD’ படம் வெற்றி அடைந்து வசூல் சாதனைப் படைத்தது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அமிதாப் பச்சன்.

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்து பேன் இந்தியா திரைப்படமாக வெளியான படம் ‘Kalki 2898 AD’.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் ‘Kalki 2898 AD’ படம் வெற்றி அடைந்து வசூல் சாதனைப் படைத்தது தொடர்பாகப் பேசிய அமிதாப் பச்சன், “‘Kalki 2898 AD’ படம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இத்திரைப்படத்தில் வேலைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்திருக்கிறது. படக்குழுவின் உழைப்புதான் இதற்குக் காரணம்.

கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட கலைஞர்களுடன் நடிக்க வாய்ப்பளித்தற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபாஸுக்கு வேண்டுமானால் 1000 கோடி ரூபாய் வழக்கமானதாக இருக்கலாம். ஏனென்றால் அவரின் பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கின்றன. ஆனால் எனக்கு இது பெரிய விஷயம்.

அமிதாப் பச்சன், கமல், தீபிகா, பிரபாஸ்

இது போன்ற ஒரு பெரிய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இந்தப் படத்தை 4 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவம் கிடைக்கிறது. நமது கலாசாரம் மற்றும் புராணக்கதைகள் குறித்த கல்வியாக இதனைக் கருதுகிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version