“பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் நகரமான டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்
அருகே இன்று அதிகாலை வான்வழியாக டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமனைச் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இன்று [ஜூலை 19] அதிகாலை 3.15 மணியளவில் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த வான்வெளித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கட்டடம் அமெரிக்க தூதரக கட்டடத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,
89,459 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.”,