கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) பலத்த காயங்களுடன் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அநுராதபுரம், மிஹிந்தலை பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சடலமாக மீட்கப்பட்டவர் மெல்சிரிபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், தனது பணியை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் வாகனமொன்றில் பயணிக்கும் போது கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்தாரா அல்லது வீதியில் பயணிக்கும் போது வாகனமொன்று மோதி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version